பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்புதல் வயதில் மாற்றம் - ஜப்பான் வெளியிட்ட காரணம்
ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13 இல் இருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த சட்டபூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது இந்த வயதின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள்
இது தொடர்பான சட்ட மசோத ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தத்தை ஜப்பானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் சமூக ரீதியிலான அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்த மசோதாவின் மூலம் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றிற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் வயது
பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இங்கிலாந்தில் 16 ஆகவும், பிரான்சில் 15 ஆகவும், ஜெர்மனி மற்றும் சீனாவில் 14 ஆகவும் காணப்படுகிறது.
ஜப்பானில் 1907 ம் ஆண்டில் இருந்து 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.
இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில், தற்போது இந்த வயதின் அளவை 16 ஆக ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
