ஜப்பான் செல்ல காத்திருப்பவரா நீங்கள்..! இதோ உங்களுக்கு ஓர் முக்கிய தகவல்
ஜப்பானில் (Japan) சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குடியேற்ற செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 2028 ஆம் ஆண்டுக்குள் விசா இல்லாத பயணிகளுக்கு வருகைக்கு முந்தைய சோதனை முறையை அறிமுகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பின் (ESTA) மாதிரியாக இந்த புதிய அமைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் உட்பட தற்போது குறுகிய கால விசாக்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள 71 நாடுகள் அல்லது பிராந்தியங்களைச் சேர்ந்த பயணிகள், ஜப்பானுக்கு வருவதற்கு பல நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட மற்றும் பயணத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜப்பானின் சுற்றுலாத் துறை
அதன்போது, குற்றவியல் வரலாறு கொண்டவர்கள் அல்லது குடியேற்ற மீறல்களுக்காக அடையாம் காணப்பட்டவர்களுக்கு புறப்படுவதற்கு முன்பு அனுமதி மறுக்கப்படலாம், இது அந்நாட்டிற்குள் எல்லைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
Japan to launch prescreening of visa-free travelers in FY 2028#Japan #travel #ESTA https://t.co/OngizIRPkQ
— Kyodo News | Japan (@kyodo_english) May 19, 2025
ஜப்பானின் சுற்றுலாத் துறை சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு வலுவான மீட்சிப் பாதையில் உள்ளது.
ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பின் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் வருகை 3.5 மில்லியனை எட்டியது, இது முதல் காலாண்டில் மொத்தம் 10.54 மில்லியனாக பதிவாகியுள்ளது.
எனவே புதிய வருகைக்கு முந்தைய பரிசோதனை செயல்முறை ஜப்பானின் வளர்ச்சி உத்திக்கு மையமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசா விலக்கு
தற்போது, அமெரிக்க குடிமக்களும், கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா போன்ற விசா விலக்கு பெற்ற நாடுகளும் விசா இல்லாமல் குறுகிய கால தங்குதலுக்காக (90 நாட்களுக்குள்) ஜப்பானுக்குள் நுழையலாம், ஆனால் சரியான நேரத்தில் புறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால், பயணத்திற்கு முன் விசாக்கள் பெறப்பட வேண்டும் என்பதுடன், வருகைக்கு முன் அனைத்து பயணர்களும் விசிட் ஜப்பான் வலை வழியாக குடியேற்றம் மற்றும் சுங்க அறிவிப்புகளை நிகழ்நிலையில், பூர்த்தி செய்ய வேண்டும் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
