ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா(yoko kamikawa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின்(Japanese Foreign Minister) விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம்
இதன்படி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் இந்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |