அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானிய போர்க்கப்பலும் கொழும்பில் தரித்தது
அமெரிக்காவின்(us) போர்க்கப்பல் நேற்று(16) கொழும்புதுறைமுகத்திற்கு வந்த நிலையில் ஜப்பான்(japan) கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'சமிடரே' ('SAMIDARE' )என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (நவம்பர் 17, 2024) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலை கடற்படை மரபுப்படி சிறிலங்கா கடற்படையினர் வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'சமிடரே' ('SAMIDARE') என்ற கப்பல் 151 மீற்றர் நீளமும், மொத்தம் 199 கடற்படையினரைக் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் நவோக்கி கோகா உள்ளார்.
தளபதிக்கிடையில் சந்திப்பு
'சமிடரே' கப்பலின் தளபதி கமாண்டர் நவோகி கோகா மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை (2024 நவம்பர் 18) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா கடற்படைக் கப்பலுடன் பயிற்சி
மேலும், 'SAMIDARE'கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 19, 2024 அன்று நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு சிறிலங்கா கடற்படைக் கப்பலுடன் கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |