ஜெயரஞ்சன் யோகராஜ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனம்
Bandula Gunawardane
Journalists In Sri Lanka
By Vanan
சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக பணிப்பாளர் சபைக்கு தமிழ் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்துள்ள நிலையில், இவருக்கான நியமனத்தை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கியுள்ளார்.
இவர் இலத்திரனியல் ஊடகத்துறையில் ( வானொலி / தொலைக்காட்சி / சமூக ஊடகம் ) சுமார் 21 வருட அனுபவமுள்ளவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனித்துறையில் விசேட பட்டம் பெற்ற இவர், ஊடகத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர்.
அறிவிப்பு, செய்தி வாசித்தல், பேச்சாற்றல், நடிப்பு போன்ற பல்துறை ஆளுமை பெற்ற இவர், ஊடத்துறையில் பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்