மாவையின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி
இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (02.02.2025) சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.
கட்சியின் மூத்த தலைவர்
இதேவேளை, மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் மாவை சேனாதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சமய கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |