ராஜபக்சர்களிடையே மோதல்: அரசியலில் தடைவிதிக்கப்பட்ட முக்கிய புள்ளி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மரணத்திற்கு பிறகு அவரது உடல் பதப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) கூறியதற்கு ராஜபக்ச குடும்பத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ராஜபக்சர்களின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடாது என அவருக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் உடல்
மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
மறைவுக்குப் பிறகு, சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமிய புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போலவே மகிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பதப்படுத்தப்பட வேண்டும் என்று அதன்போது அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.
ராஜபக்சர்களிடையே விமர்சனம்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரோக்கியமான நிலையில், உயிரோடு இருக்கும் நிலையில், அவரது மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளதானது, ராஜபக்சர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, இவ்வாறான அபசகுனமான கருத்தை வெளியிட்டமைக்காக அஜித் ராஜபக்சவை எந்த எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடாது என ராஜபக்ச தரப்பினர் தடை விதித்திருக்கலாம் என சமூக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |