மலையக மக்களுக்கு காணிகளை விடுவியுங்கள் : அநுரவிடம் ஜீவன் எம்.பி கோரிக்கை
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கொட்டகலை, லொகி தோட்டப் பகுதியில் நேற்று (08) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சொந்தக் காணிகள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், "ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சொந்தக் காணிகள் இருக்கும் பட்சத்தில் எமது வாழ்க்கைத்தரம் உயர்வடையும்.

தேர்தல் காலங்களில் நாம் சலுகைகளை நம்பிப் பின்னால் சென்றுகொண்டிருக்கின்றோம். அனைவருக்கும் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்ற விடயம்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |