மூத்த அரசியல் தலைவர் சம்பந்தனின் மறைவுக்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவருமான இரா. சம்பந்தனின் (R. Sampanthan) மறைவிற்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியை தனது “X” தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அமைச்சர், “இலங்கையில் நீண்டகாலம் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீண்டகாலம் தலைமை தாங்கியவருமான இரா.சம்பந்தன் காலமானதை அறிந்து நான் மிகுந்த கவலை அடைகிறேன்.
கட்சியின் தூண்
6 தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அதன் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்து வருகிறார்.
I am deeply saddened to hear about the passing of R Sampanthan, one of the longest serving Sri Lankan MPs, and long-time leader of the Tamil National Alliance.
— Jeevan Thondaman (@JeevanThondaman) July 1, 2024
With 6 decades in politics under his belt, he has been a pillar of the TNA since its conception, and a stalwart in the…
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |