சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்
உலகிலுள்ள மற்ற நாடுகளின் அரசியல் கட்டமைப்பை விட சுவிஸின் அரசியல் கட்டமைப்பு வித்தியாசமாக இருப்பதனால் இதனை முன்னுதாரணமாகக் கொண்டே இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைத் தரப்பினர் இங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என சுவிட்ஸர்லாந்து சென்.கலன் நாடாளுமன்றத்தின் முதல்வரான ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் உலகாளும் தமிழர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுவிஸில் வாழக்கூடிய இளைய தலைமுறையினருக்கு தொப்புள்கொடி உறவுகள் மீது அதிக அக்கறை இருக்கின்றது.
ஈழத்திலிருந்து இந்த நாட்டிற்கு வந்து அரசியல் தஞ்சம் கோரியிருந்த எனக்கு குடியுரிமை கிடைப்பதற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. எனக்கு குடியுரிமை கிடைத்த பிறகு நான் ஏனைய இன மக்களுடன் இணைந்து பணியாற்றுவதைப் பார்த்து பசுமைக் கட்சி எனக்கு வாய்ப்பு வழங்கியது.
2012 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததனால் 10 வருடங்களாக இந்த நகரசபையில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றேன்.
அதற்கான அங்கீகாரமாக தான் சென்.கலன் நாடாளுமன்றத்தின் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுவிஸில் யாரும் அரசியலில் இணையலாம். வருமானம் இன்றி சேவை அடிப்படையில் செய்ய வேண்டும் அந்த அடிப்படையில் இந்த அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |