வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு
மாலைதீவில்(maldives) இலங்கையர்களுக்கு(sri lanka) பெருமளவு வேலைவாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும்,தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மாலைதீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சகத்தில் திங்கட்கிழமை (02) மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது.
மாலைதீவு உயர் ஸ்தானிகர் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு
இதன்போதே மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திறமையான மற்றும் தொழில்முறை வேலை வகைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று மசூத் இமாட் அமைச்சர் விஜித ஹேரத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.
பணம் அனுப்புவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மாலைதீவில் பணிபுரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் விஜித ஹேரத்தின் கேள்விக்கு பதிலளித்த மசூத் இமாட், மாலைதீவு அரசாங்கமும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியுள்ளது என்றும், பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்கனவே ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்