இலங்கை இளைஞர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு! உதவிக்கரம் நீட்டும் வெளிநாடு
இலங்கை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசு கொஸி ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குமாறு ஜப்பான் அரசாங்கத்திடம் அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்பு
அதற்கிணங்க இலங்கையில் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் தூதுவர் இது குறித்து மிக சாதகமான பதிலை வழங்கியதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரியாவிலும் சிறந்த வேலை வாய்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் பெருமளவான இளைஞர் யுவதிகள் வேலையிழக்கும் ஆபத்தை சந்தித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி, அதிகளவான இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், கடந்த சில மாதங்களில் நாட்டைவிட்டு வெளியேறுவோறின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை சீராக குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாடுகள் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க தயாராகியுள்ளன.
அண்மையில் கொரியாவிலும் சிறந்த வேலை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து.
அதேபோன்று தற்போது ஜப்பானும் தனது பங்களிப்பை ஆரம்பித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
