பட்டப்படிப்பு இல்லாமல் வேலைவாய்ப்பு : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தமது நிறுவனத்தில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
41,620 கோடி டொலர்கள் மதிப்புடன் முதலிடத்தில் உள்ள மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
தொழில் வாய்ப்பு
இந்தநிலையில், மஸ்க் அவரது நிறுவனத்தில் தொழில் வாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நீங்கள் ஒரு தீவிர மென்பொருள் பொறியாளராக இருந்து, எல்லாவற்றுக்கும் செயலியை உருவாக்க விரும்பினால் உங்கள் சிறந்த படைப்புகளை code@x.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுடன் சேருங்கள்.

நீங்கள் எங்கு படித்தீர்கள், எந்தப் பாடசாலையில் படித்தீர்கள் அல்லது பாடசாலைக்கு சென்றீர்களா ? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்" என அவர் தெரிவித்துள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்