காசா விவகாரத்தில் தவறிழைக்கும் நெதன்யாகு! ஜோபைடன் கடும் ஆதங்கம்
Benjamin Netanyahu
Joe Biden
Israel
World
Gaza
By Shalini Balachandran
காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் தவறுசெய்வதாக கருதுவதாகவும் மற்றும் இஸ்ரேலிய பிரதமரின் அணுகுமுறையை ஏற்றுகொள்ளமுடியாது எனவும் ஜோபைடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதியானது அவசியமமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான அமைப்பு
அத்தோடு நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதோடு அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்க வேண்டுமென ஜோபைடன் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி