சர்ச்சையில் சிக்கினார் ஜோ பைடன் - நாடு முழுவதும் கட்டாய உத்தரவு
america
army
kamala haris
joe baiden
By Vasanth
முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை வொஷிங்டனில் உள்ள முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன், முகக்கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனினும் உடனடியாக அவர் முகக்கவசம் அணிந்துள்ளார். இதேவேளை முகக்கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. இது எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு தேசபக்திச்செயல்.
எனவே தான் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தேன் என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி