ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தயார் நிலையில் ட்ரம்ப்
ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்திப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மோதல் நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் நடவடிக்கை
இதன்போது, ஈரானின் நடவடிக்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தான் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கின்றேன் எனவும், அவற்றால் மிகப் பெரிய விடயங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் முன் உள்ள விருப்பங்களில், ஈரானை முழுமையாக அழிப்பது, பொருளாதார ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அந்நாட்டை வீழ்ச்சியடையச் செய்வது அல்லது புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவை இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கு போரின் பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்தைத் தடுக்க ஈரான் முயற்சித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தனது நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துநர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |