அமெரிக்காவுடன் பேச்சு : 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்
அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
எங்களுடைய செய்தி தெளிவானது
எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள் நிபந்தனைகள் முன்வைக்கிறோம். இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா
அதேவேளை7 நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா என்றும் தெரியவில்லை.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |