தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் : காவல்துறை தீவிர விசாரணை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Murder
By Pavi
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா காவல்துறை
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |