அல் - அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய அமைச்சர்! ஜோர்தான் கடும் கண்டனம்
ஜெரூசலமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் நுழைந்த சம்பவத்தை ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டல் என சுட்டிக்காட்டிய ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுஃப்யான் அல்-மோமானி, இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் குடியேற்றவாசிகளின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்களை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
மதத் தல ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரத்தின் மீதும், அங்குள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீதும் இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை எனவும் அல்-மோமானி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மதத் தலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதுடன், அவற்றை வழிபாட்டாளர்கள் அணுகுவதற்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் உறுதியான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |