ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

CID - Sri Lanka Police Johnston Fernando Sri Lanka
By Sathangani Oct 23, 2024 11:55 AM GMT
Report

புதிய இணைப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூன்றாம் இணைப்பு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ​​​​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் இன்று (23) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Johnston Fernando Present At Cid

இந்த நிலையில் தற்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Johnston Fernando Present At Cid

இரண்டாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Johnston Fernando Present At Cid

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று (23) முன்னிலையாகியுள்ளார்.

இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

குற்றப்புலனாய்வு திணைக்களம்

இதேவேளை சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Johnston Fernando Present At Cid

குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கமைய முன்னாள் அமைச்சருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

நாமல் - சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

நாமல் - சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026