வெனிசுலாவில் சற்றுமுன்னர் பதிவான மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வெனிசுலா கடற்கரைக்கு அப்பால் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
வெனிசுலாவின் வடக்கு அரகுவா மாநிலத்திற்கு அருகே 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை வெனிசுலாவைத் தாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, பல பின் அதிர்வுகளும் சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புக் குழு
அந்த நிலநடுக்கங்களில் இருந்து தப்பியிருக்கக்கூடியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், குறைந்தது 1,430 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 51,000 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டு 72 மணி நேரம் கடந்த பிறகு, உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சாத்தியமற்றதாகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய நிலநடுக்கம் வெனிசுலாவின் தலைநகரான கராகஸுக்கு மேற்கே 70 கி.மீ (43.4 மைல்கள்) தொலைவில் பதிவானது.
அந்த நிலநடுக்கம் தொடர்பான எந்த சேதமும் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் லா குவைரா மாநிலத்தில் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதோடு, கராகஸில் உள்ள சில பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், மீட்புப் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் ஏற்பட்ட அலைபேசி மற்றும் இணையத் துண்டிப்புகளால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்