மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த பூமியில் உள்ள மண் மீது மட்டுமல்ல எதிலும் உரிமையில்லை- ஜோன்ஸ்டன் ஆவேசம்!

sri lanka JVP johnston fernando
By Kalaimathy Nov 01, 2021 07:14 AM GMT
Report

மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த பூமியில் உள்ள மண் மீது மட்டுமல்ல எதிலும் உரிமையில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

 புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட சென்றிருந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரித்த அவர்,

1971 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் நாட்டிற்கு செய்த அழிவுக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும் எனவும் விடுதலைப்புலிகளும், மக்கள் விடுதலை முன்னணியுமே் நாட்டை அழித்ததன் காரணமாவே நாடு முன்நோக்கி செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர், தமது கட்சியின் வங்கிக் கணக்கில் இருக்கும் 6 முதல் 7 பில்லியன் ரூபாய் பணத்தை தவிர அரசாங்கம், நாட்டில் உள்ள அனைத்தையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது என்ற பொய்யை சமூகமயப்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் உண்டில்களை குலுக்கி சம்பாதித்து, வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்துள்ள 6 முதல் 7 பில்லியன் ரூபாய் பணம் பற்றிய உரிமை மாத்திரமே இருக்கின்றது. அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் மாத்திரமே இலங்கைக்கு சொந்தம், நாட்டில் எனைய சகல வளங்களும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட விட்டன என்ற கருத்தை அவர்கள் முன்வைக்க முயற்சிக்கின்றனர்.

நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன என்ற பொய்யை சமூகமயப்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர். எனினும் அனைத்து சவால்களையும் வெற்றிக்கொண்டு நாங்கள் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்