ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை (Johnston Fernando) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தீர்ப்பானது இன்று (1.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் (Colombo High Court) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம்
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கினங்க குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளமையினால் அன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியவில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதனைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 25,000 ரொக்கப் பிணையிலும் 1 மில்லியன் சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |