CID விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மாநகர சபை உறுப்பினர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Vavuniya
By Thulsi
வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினரான சிவசுப்பிரமணியம் பிரேமதாஸவை விசாரணைக்கு வருகை தருமாறு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு இன்று (20.10) காலை வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த உறுப்பினரிடமிருந்து வாக்கு மூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி