நெதன்யாகுவை வெளியேற்றி கூட்டிணைய தயாராகும் கட்சிகள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தலைமையிலான தீவிர வலதுசாரிக் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றி வீட்டிற்கு அனுப்பத் தயார் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் நாடாளுமன்றத் தேர்தலில் அரபு சமூகத்தினரின் வாக்குகள் வீழ்ச்சியடையாமல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.
அரபுப் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுப் பட்டியலின் (Joint List) தலைவர் யூசுப் ஜபாரீன் (Yousef Jabareen) இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டுப் பட்டியல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தற்போதைய ஆளும்கட்சியின் தீவிரப் போக்குகள் நாட்டின் ஒவ்வொரு அரபுப் பிரஜையின் வாழ்க்கையையும் பேரழிவிற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்தோடு இக் கூட்டணி ஆட்சி உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற பலத்தையும் அரசியல் செல்வாக்கையும் சரியான முறையில் பயன்படுத்தி தாங்கள் நம்பும் ஜனநாயக மற்றும் சமத்துவக் கொள்கைகளை முன்னெடுக்க கூட்டுப் பட்டியல் முழுமையாகத் தயாராக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நெதன்யாகு, இத்தாமர் பென்-க்வீர் (Ben-Gvir) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் (Smotrich) ஆகியோரின் தீவிரவாத அரசாங்கத்தை அகற்றி அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கான பாதையை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இனவெறி மற்றும் ஒதுக்குதலுக்கு எதிரான போராட்டம் என்றும் உண்மையான யூத-அரபு அரசியல் பங்காளித்துவத்தின் மூலமே நாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |