கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka
By Dharu Jun 24, 2026 11:58 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் முக்கிய சாட்சியம் ஒன்று அம்பலமாகியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(24.06.2026) இடம்பெற்ற விசாரணையில் குறித்த சாட்சியம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக செலிசிட்டர் ஜெனரல், கோட்டபாய குறித்த முக்கிய புகைப்படம் ஒன்றை விசாரணையின்போது முன்வைத்துள்ளார்.

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இதில் கோட்டாபய ராஜபக்சவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம் | Joint Photo Of Gotabaya Azad Maulana

இது குறித்து தெரிய வருகையில்,

கோட்டாபய ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் கூட்டுப் புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தனது கட்சிக்காரருக்கு நினைவில் இல்லை என ஜனாதிபதி சட்டமா அதிபர் ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தரப்பினர் அரசியல்வாதிகளைத் தவறாமல் சந்திக்க வருவதால், அத்தகைய புகைப்படம் இருந்ததற்கான நினைவு இல்லாததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2017-ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அசாத் மௌலானா சந்தித்தார் என்ற கூற்றை மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி முழுமையாக மறுக்கவில்லை.

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

கோட்டாபய முதல் பிள்ளையான் வரை அதிரும் சுரேஸ் சாலேயின் கைது!

சாதாரண உரையாடல்

இருப்பினும், அந்தச் சந்திப்பின்போது கோட்டாபய கூறப்பட்டதாகக் கூறப்படும் விடயங்கள், ஒரு அரசியல்வாதியால் சாதாரணமாக நடத்தப்படும் வகையிலான சாதாரண உரையாடல்களே என்று அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம் | Joint Photo Of Gotabaya Azad Maulana

அசாத் மௌலானாவுடனான சந்திப்பையோ அல்லது அது தொடர்பான புகைப்படத்தையோ மறுக்கவில்லை என்றாலும், சனல் 4-க்கு அசாத் மௌலானா அளித்த அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பித்த ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர், அந்த உண்மைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வலியுறுத்தினார்.

நாட்டின் நீதித்துறை, சட்டத்தரணிகள் மற்றும் முக்கிய அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து அசாத் மௌலானா கூறியிருந்த அறிக்கைகளை அவர் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

மேலும், அசாத் மௌலானாவின் அரசியல் சித்தாந்தங்களைச் சுட்டிக்காட்டி, இலங்கையைப் பற்றி இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட ஒருவரின் நம்பகத்தன்மையை சட்டமா அதிபர் திணைக்களம் கேள்விக்குள்ளாக்கியது.

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒரு தனிநபரின் கூற்றுகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிப்பது வெட்கக்கேடானது என்று ரொமேஷ் டி சில்வா கூறினார்.

கோட்டாபய - மகிந்த முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அறிவிக்கப்போகும் கம்மன்பில

கோட்டாபய - மகிந்த முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அறிவிக்கப்போகும் கம்மன்பில

அசாத் மௌலானாவின் கூற்று

மேலும், அசாத் மௌலானாவின் கூற்றுகளை நம்புவதை சட்டமா அதிபர் திணைக்களம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோட்டாபய - அசாத் மௌலானாவை சந்தித்த புகைப்படம்! நீதிமன்றில் அம்பலமான சாட்சியம் | Joint Photo Of Gotabaya Azad Maulana

ஓய்வுபெற்ற நீதிபதிகள்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய எண்ணற்ற குழுக்களின் அறிக்கைகளில் கோட்டாபய ராஜபக்வுக்கு எதிராக எந்தவொரு உண்மைகளும் குறிப்பிடப்படாத ஒரு சூழலில், அசாத் மௌலானாவின் ஒரு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே அவர் கைது செய்யப்படத் தயாராகி வருகிறார் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் சட்டத்தரணி வாதத்தைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று பதிலளிக்கப் போதுமான நேரம் இல்லாததால், மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக மனு மீதான விசாரணையை ஜூலை 6 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்தது.

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026