சர்ச்சைக்குரிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனம் : சிக்கிய மகிந்தவின் சகா
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பான விசாரணையில் காமினி அபேரத்ன என்ற சந்தேக நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட சட்ட விரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
குறித்த தனியார் ஹோட்டலின் வாகனம் நிறுத்துமிடத்தில், 'டபிள்யூபி சி 24-0430' என்ற எண் கொண்ட கறுப்பு நிற BMW கார் சந்தேகத்திற்கிடமான முறையில் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 10 ஆம் திகதி முதல்(10.10.2024) விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விசாரணைக்கு அமையவே காமினி அபேரத்ன தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என பி. எம்.டபிள்யூ. கார் உதிரி பாகங்களில் இருந்து ஒருங்கிணைப்பு செய்யப்பட்டமை தெரியவந்தது.
குறித்த கார் பதிவு செய்யப்படாமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாகன சர்ச்சை
கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த காரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களையும் இரகசிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த போதிலும், சுகயீனமுற்றிருப்பதால் பின்னர் வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான பயணத்தடையை பெற்றுக்கொள்ளவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |