தொடர் தோல்வி எதிரொலி : இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் எடுத்த முடிவு
இங்கிலாந்து ஒருநாள் அணியின்(england cricket team) தலைவர் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர்(Jos Buttler) விலக முடிவு செய்துள்ளார்.
34 வயதான ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணிக்காக 187 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 5196.
ஒருநாள் போட்டியில் பட்லரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 162 ஆகும், அவர் ஆட்டமிழக்காமல் விளையாடும்போது இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார்.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்று(01) கராச்சியில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். அந்தப் போட்டியில்ல் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
