வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
Journalists In Sri Lanka
By pavan
கொழும்பில் அரச படைகளால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரும் வகையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் வாயில் கறுப்புத்துணிகளைக் கட்டியவாறும் பதாகைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு முன்னால் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், அரச படைகளால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது அடக்குமுறை வேண்டாம், அரசே பதில் கூறு, ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.



உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 12 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி