அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து : ஊடகவியலாளர் ஸ்தலத்தில் பலி
Trincomalee
Sri Lanka Police Investigation
Journalists In Sri Lanka
By Sumithiran
திருகோணமலை (trincomale)கந்தளாயைச் சேர்ந்த ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று(17) அதிகாலை ஹபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்னபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், ப்ரியான் மலிந்தவின் மோட்டார் சைக்கிள் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றனர். சம்பவம் குறித்து ஹபரணை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்