ஊடகர் ஜஸ்ரின் பரிஸில் காலமானார்!
France
Paris
By Independent Writer
புலம்பெயர் தமிழ் மக்களின் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவ குரலை கொண்டிருந்த ஜஸ்ரின் அருள்ராஜா தம்பிராஜா பிரான்சில் நேற்று சுகயீனம்காரணமாக காலமானார்.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியை பிறப்பிடமாக கொண்ட இவர் புலம்பெயர்ந்து வந்த பின்னர் பல ஒலி- ஒளி ஊடகங்கள் மற்றும் தமிழ்தேசிய நிகழ்வுகள் உட்பட்ட மேடைகளில் பங்களிப்பை வழங்கியவர்.
ஐ.பி.சி தமிழ் வானொலியிலும் சிறிது காலம் அவர் தனது பங்களிப்பை வழங்கியவர்.
பன்முக ஆற்றல் கொண்ட இவர் கடந்த 3 வருடங்களாக புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளான நிலையில் நேற்று மாலை பரிஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவரது இழப்பை அடுத்து சக ஊடக நண்பர்கள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் கலைபண்பாட்டுக் கழகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்