தமிழ் ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுத்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு
சுயாதீன ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுயள்ளது.
ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.
மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவு
தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 36 நிமிடங்கள் முன்
