ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை : பிரதமருக்கு பறந்த கடிதம்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில், தனது கடமையை புறக்கணித்த சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு (Harini Amarasuriya) அகிம்சா விக்கிரமதுங்க எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மவுண்ட்லவேனியா நீதிமன்றம் சந்தேகநபர்கள் என குறிப்பிட்ட மூவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதற்கு கடந்த வாரம் சட்டமா அதிபர் எடுத்துள்ளதீர்மானம் குறித்து நான் ஆழ்ந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
அரசியல் தலையீடு
சட்டமா அதிபரின் இந்த தீர்மானத்தை மறுஆய்விற்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து நான் நன்றியுடையவளாக உள்ளேன்.
அரசியல் தலையீடு அற்ற சுதந்திரமான குற்றவியல் நீதிமுறையை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது
தனது அறிவிப்பினால் அரசியல் ஆபத்துக்கள் உருவாகலாம் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க படுகொலை
எனினும் சட்டமா அதிபர் தனது முடிவை மாற்றுவதற்கு போதுமான அழுத்தங்களை கொடுப்பது மாத்திரம் போதுமானது என அரசாங்கம் கருதுகின்றது என அஞ்சுகின்றேன்.
கடந்தவாரம் இடம்பெற்ற சம்பவங்கள் சட்டமா அதிபரின் தீர்மானம் ஒரு விபத்து அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இது ஒழுங்கற்ற கலாச்சாரம்,தன்னிறைவு மேலும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான கடமையை முற்றாக புறக்கணித்தல்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த ஆரப்பாட்டமானது இன்று (06) இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தினால் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இளம் பத்திரிகையாளர் சங்கம் நீதி கோரும் அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)