ஊடகவியலாளர் நிலக்சனின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு ( படங்கள்)
Sri Lanka Army
Jaffna
Journalists In Sri Lanka
By Vanan
15ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஊடகவியலாளரும், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.
சிறிலங்கா படைகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 01.08.2007அன்று இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இவரது, 15ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நேற்று(01) மாலை நடைபெற்றது.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.




