படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு
jaffna
death
journalist
nilaxsan
By Vanan
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிந்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி