செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக நீதித்துறையை நாடாவுள்ள ரெலோ தரப்பு
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடுக்குக்கள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகின்றன.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள கட்சி உறுப்புரிமை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் அவர் மீது முக்வைக்கப்பட்ட சந்தேகத்திட்கிடமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படுத்திய ரெலோ கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுத்தங்களும் மிரட்டல்களும் விடுக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றில் நேற்று ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் வெளியாகிய செய்திகள் தொடர்பில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் சிறப்புரிமை மீறும் செயல் என அவரால் அறிக்கையிடப்பட்டன.
இந்த பின்னணியில் தற்போது அவர் தொடர்பில் மற்றுமொரு குரல்பதிவும் வெளியாகியுள்ளது. அத்தோடு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு விசேட கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி நாடாளுமன்றில் அவர் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், மேலும் அவருக்கெதிராக வலுப்படுத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |