பாதுகாப்பு செயலரிடமிருந்து விடைபெற்றார் ஜூலி சங்
இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ,பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை நேற்று(08) பாதுகாப்பு அமைச்சில் விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.
தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள்
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் அமெரிக்க தூதுவர் தெரிவிக்கையில்,
நெருக்கடியான நேரத்தில் பணி
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தாவை (ஓய்வு) சந்தித்ததில் மகிழ்ச்சி.
Pleasure to meet with Secretary to the Ministry of Defence, Air Vice Marshal Sampath Thuyacontha (Ret) today. From working closely with @LKDefence during the 2022 economic crisis to our collaboration in response to Cyclone Ditwah—and our ongoing efforts to strengthen maritime… pic.twitter.com/gRgVkJqCUE
— Ambassador Julie Chung (@USAmbSL) January 8, 2026
இலங்கையில் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது உடன் நெருக்கமாக பணியாற்றியது முதல் டித்வா சூறாவளிக்கு எதிரான எங்கள் ஒத்துழைப்பு வரை - மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் வரை - அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்