பிரதமர் ஹரிணிக்கு எதிரான அவதூறு பிரசாரம் : கஜேந்திரகுமார் கடும் கண்டனம்
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பிரதமர் மற்றும் அவரது கட்சியின் முன்னணி உறுப்பினர் என்ற வகையில் மட்டுமல்லாமல், கல்வி அமைச்சர் என்ற முறையிலும் ஹரிணி அமரசூரியவுடன் தனக்கும் அவரது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் (TNPF) சில கடுமையான கொள்கை வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவதூறு பிரசாரத்தை ஏற்கமுடியாது
"அவருக்கு எதிராக நடத்தப்படும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் கண்டிக்கத்தக்க அவதூறு பிரச்சாரத்துடன் நாங்கள் நிச்சயமாக எங்களை இணைத்துக் கொள்ளவில்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியா அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தத்தின் கீழ் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தரம் 06 ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 17 மணி நேரம் முன்