பிரதமருக்கு எதிராக வாக்களிக்கத் தயார்: பொதுஜன பெரமுன பகிரங்க அறிவிப்பு
கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஒரு பொருத்தமான அரசியல் நடவடிக்கை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள்.
உரிய நடவடிக்கைகள்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையாகவே மக்கள் பக்கம் நிற்கிறார்கள் என்றால் அவர்களும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

நாட்டுக்குப் பொருத்தமானதொரு கல்வி மறுசீரமைப்பே தற்போதையத் தேவை. எமது ஆட்சியின் கீழ் அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 1 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
18 மணி நேரம் முன்