அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு...!
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் வெனிசுலாவில் கச்சா எண்ணெய் கட்டமைப்பை நவீனமாக்குமாரு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிருவாகம் அறிவுருத்தியுள்ளது.
இதனடிப்படையில், வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விற்பனை
மேலும் தெரிவித்த அவர், “வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடை படிப்படியாக நீக்கப்படும்.
வெனிசுலா கச்சா எண்ணெயை மீண்டும் விற்கப் போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தப் பணம் வெனிசுலா மக்களுக்காக பயன்படுத்தப்படும்.
2000 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் கார்பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்றும் கம்பெனிகளை வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் அரசுடைமையாக்கினார்.
அந்த நிறுவனங்களுக்கு எல்லாம் இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது.
வெனிசுலா எண்ணெய் விற்பனை மூலம் முதலில் கிடைக்கும் பணம், அமெரிக்க நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்க பயன்படுத்தப்படாது, அது நீண்ட கால பிரச்சினை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |