யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் சீனா விஜயம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் இம்மானுவல் தயாளன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி சீனாவுக்குப் (China) பயணிக்க உள்ளார்.
பெப்ரவரி 6 ஆம் திகதி வரை அங்கு நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார்.
டிஜிற்றல் பொருளாதார பரிபாலனம் மற்றும் தலைமைத்துவ ஆளுமையைக் கட்டியெழுப்பும் சர்வதேச பரிமானங்களுக்கான நிகழ்வுகள் சீனாவில் இடம்பெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக அவர் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.
சிமாட் சிற்றி அபிவிருத்தி
ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவகத்தால் உலக டிஜிட்டல் பொருளாதார நகரங்கள் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதில் இலக்கு, நோக்கங்கள், அரசின் முன்னுரிமைகளுக்கு இணங்கியதாக மிகவும் நெருங்கியதாகக் காணப்படுகிறது.
சிமாட் சிற்றி அபிவிருத்தி பரிபாலனத்தை பலப்படுத்துதல் மற்றும் சேவை வழங்கும் உத்திகள் தொடர்பிலும் உள்ளூராட்சி அரசுகளுடன் பேசப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையில் இருந்து முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள்,பணிப்பாளர்கள் என 19 பேர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |