யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர் பல தரப்புடன் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதேவேளை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு இன்று காலை விஜயம் செய்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Met with Governor of the Northern province P.S.M. Charles to hear about social economic challenges & opportunities and her priorities for the province, and how we can further support the development efforts in the North. #USSriLanka75 pic.twitter.com/u8eqn6b0dU
— Ambassador Julie Chung (@USAmbSL) August 23, 2023