தமிழர் தாயகத்தில் மறக்கப்பட்டதா யூலை - 5
தமிழர் தாயகத்தில் வருடாந்தம் யூலை ஐந்தாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வந்த கரும்புலிகள் தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடுமையான ஒடுக்குமுறைகள் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக இன்று தாயகத்தில் பகிரங்கமாக நினைவுகூரப்படவில்லை.
வழமையாக நினைவுகூரல்களை செய்யும் அரசியல் பிரமுகர்களும் இன்று நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை.
எனினும் புலம்பெயர் நாடுகளில் இந்த நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமக்கு தொடர்ச்சியாக இழைக்கப்படும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையான உடைகள் அணிந்து தமிழர் தாயக பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போன்று தமது உறவினர்களை தங்களிடம் கையளிப்பதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க மக்கள் பிரதிநிதிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.