ஜூபிடரில் ஏற்பட்ட திடீர் புயல்: நாசா வெளியிட்ட அரிய படங்கள்!
சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய கிரகமான வியாழன் கோளில் இன்று (22) புயல் ஏற்பட்டுள்ளது.
ஜூபிடர் (Jupiter) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வியாழன் கோளில் ஏற்பட்ட புயல் நிலை ஓராண்டு, 10 ஆண்டுகள் அல்லது பல நூற்றாண்டுகள் கூட நீடிக்கலாம் என நாசா கூறியுள்ளது.
இந்த புயல் தொடர்பில் நாசா பகிர்ந்துள்ள படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவான மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
புயல்
வியாழன் கோளில் ஏற்பட்ட இந்த புயல், கிரகத்தின் வானிலையை வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணிக்கு 643 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் காற்று வீசுவதாக நாசா அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
வியாழனின் வளிமண்டலத்தில் நீலம், வெள்ளை மற்றும் பழுப்பு நிற மேகங்கள் மற்றும் புயல்கள் சுழல்வதாக நாசாவின் படங்கள் விவரித்துள்ளன.
ஜூனோ மிஷன்
இந்த படங்கள் நாசாவின் "ஜூனோ மிஷன்" (Juno Mission) விண்கலம் மூலம் எடுக்கப்பட்டடுள்ளது.
அதாவது, வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |