செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது
இந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் இன்று (22) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே இந்த காணமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும்.
அதே நேரம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஓரணியில் ஒன்று திரண்டு நீதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
