ரஞ்சன் ராமநாயக்கவிடம் செல்லவுள்ள நீதிஅமைச்சர்
Dr Wijeyadasa Rajapakshe
Ranjan Ramanayake
By Sumithiran
ரஞ்சன் ராமநாயக்க
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து அவரது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொள்வதே அவரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
முன்னணி கலைஞர்களின் கோரிக்கை
இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரும் கூட்டாக இணைந்து ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கைக்கு அமைவாக ரஞ்சன் விடுதலை தொடர்பில் கூடிய விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நீதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி