நாடாளுமன்றில் ரணிலை கிழித்து தொங்கவிட்ட நீதியமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு (ranil wickremesinghe)பல்வேறு பட்டங்கள் தொடர்புடையதாக இருந்தாலும், அவர் ஒரு மோசடி செய்பவர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(harshna nnayakkara)a குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே நீதியமைச்சர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
39 ஜனாதிபதி ஆலோசகர்கள்
“அவருக்கு 39 ஜனாதிபதி ஆலோசகர்கள் இருந்தனர். ஒரு ஜனாதிபதிக்கு எல்லாம் தெரியாது என்பதால் ஆலோசகர்கள் இருப்பது நியாயமானது. ஆனால் 39 ஆலோசகர்கள் இருந்ததால், அவருக்கு எதையும் பற்றி எதுவும் தெரிந்திருக்க முடியாது,” என்று ஹர்ஷ நாணயக்கார கூறினார்.
‘இயக்குனர் ‘ போன்ற பட்டங்களைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குவதில் குறைந்தது 67 பேர் நியமிக்கப்பட்டு இருந்ததாக அவர் கூறினார்.
ஆஷு மாரசிங்க தொடர்பில் கிண்டல்
“நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர்களில் ஒருவர் ஆஷு மாரசிங்க. இந்த மாரசிங்க பாடசாலையில் படிக்கும் போது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இருந்ததால், அவர் ரணிலுக்கு நாடாளுமன்றம் பற்றி கற்பிக்க வேண்டியிருந்தது நகைப்புக்குரியது.”
ரணில் விக்ரமசிங்க நெருங்கிய கூட்டாளிகளை பயனற்ற பதவிகளுக்கு நியமித்ததாகக் குற்றம் சாட்டிய நாணயக்கார, அவர்களுக்கும் சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
“அவர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக மொத்தம் 59 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது” என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் மூன்று ஆலோசகர்கள் மட்டுமே உள்ளனர், அவர்கள் தாமாக முன்வந்து தங்கள் சேவைகளை வழங்குவதால் எந்த செலவும் இல்லை என்று அமைச்சர் நாணயக்கார மேலும் கூறினார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
