இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்
புதிய இணைப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி நிலை ஏற்பட்ட போது இந்நாட்டை பொறுப்பெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக அங்கஜன் இராமநாதன் இன்றையதினம்(23) தனது ஆதரவை வெளியிட்டார்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கியமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
தங்களது ஆதரவை இன்று (23) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் (SLPP) யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சாரதி துஸ்மந்த (Sarathi Dushmantha) ஆகியோரே இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
இதேவேளை நேற்றையதினம்(22) முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்னவும் (SB Navinna) ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |