முல்லைத்தீவு சட்டத்தரணிகளிடம் நற்பெயரை வாங்குவதற்காக என்மீது குற்றசாட்டுக்களை வைக்காதீர்கள்: சரத் வீரசேகர
நீதிபதி சரவணராஜாவை அச்சுறுத்தியிருந்தால் என்னை அப்போதே கைது செய்திருக்கலாம். நற்பெயரை வாங்குவதற்காக என்மீது குற்றசாட்டுக்களை வைக்காதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகி இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் என் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வு
குருந்தூர் மலை தொடர்பான வழக்கின் போது நான் நீதிபதி ரீ.சரவணராஜாவை அச்சுறுத்தியாதாக அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு தவறான விடயம்.
துஷார இந்துனில் கூறுவது போல் நான் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை அச்சுறுத்தியிருந்தால் என்னை அப்போதே கைது செய்திருக்கலாம்.

குருந்தூர் மலையில் தமிழர்களால் நடத்தப்பட்ட பொங்கல் நிகழ்வுக்கு சரவணராஜா அனுமதி வழங்கியிருந்தார்.
இது தொடர்பில் ரவிகரனுக்கு பேச நீதிபதி அனுமதி வழங்கியிருந்தாலும் அவர் எனக்கு அந்த அனுமதியை தரவில்லை. என்னை மௌனமாக இருக்குமாறு நீதிபதி சரவணராஜா கூறியதையடுத்து, நான் அதனை மதித்து அமைதியாக இருந்தேன்.

சட்டத்தரணிகளிடம் நற்பெயர்
எனினும், 2 ஆயிரம் வருட பழமையான பௌத்த விகாரையில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கியமை தவறான விடயமென நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.
இதனால் பௌத்த மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்படுமெனவும் தெரிவித்திருந்தேன்.

அதனை நான் இன்றும் கூறுகிறேன். இவ்வாறான கூற்று எவ்வாறு எச்சரிக்கையாக கருதப்படும்? இதனை தொடர்ந்து, இன்று வரை நான் குறித்த நீதிபதியுடன் எதுவும் பேசவில்லை.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளிடம் நற்பெயரை வாங்குவதற்காக துஷார இந்துனில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது. என்றார்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்