கோட்டாபயவிடமிருந்து நீதி கிடைக்காது -பகிரங்கமாக அறிவித்தார் கர்தினால்

justice gotabaya cardinal malcom ranjith
By Sumithiran Aug 13, 2021 04:28 PM GMT
Report

ஸ்ரீலங்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தின் ஊடாக நியாயம் கிடைக்குமெனவும், உண்மை கண்டறியப்படும் எனவும் நம்பவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞசித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக நீதித்துறையில் அவரால் எவ்வாறான விடயங்களிலும் தலையீடு செய்ய முடியுமெனவும், ஆகவே நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள், அமைச்சர்கள் உப குழுவினால் முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைவிட சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவசியமான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், எங்களுக்கு ஜனாதிபதி சார்பில் அனுப்பப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர்கள் உப குழு தொடர்பில் எமக்கு பிரச்சினை காணப்படுகின்றது. முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீண்டும் ஒருமுறை ஆராய்வதற்காக, சட்ட அறிவற்ற, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலாக நியமிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தெரிவு செய்து செயற்பட முடியாது. இது சரியாக இருக்குமென அவர்கள் நினைக்கும் விடயங்களை செயற்படுத்துவதோடு, ஏனையவற்றை அவர்கள் கைவிடுவார்கள் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி தம்முடைய அமைச்சரவையின் ஆறு பேரை தெரிவு செய்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆராய பணிப்பார் எனின் ஆணைக்குழு எதற்கு? இதற்கு முன்னதாகவும் அரசியல் ரீதியாக முன்னைய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து சாட்சிகளை பதிவு செய்திருந்தது.

எனினும் அதில் எமக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு சுயாதீனமான ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு சுயாதீனமான ஒரு ஆணைக்குழு அவசியம். குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையிலும் எமக்குத் திருப்தியில்லை. அதனைவிட 20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய, அவர் அதில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

நீதியரசர்களை அவரே நியமிக்கின்றார். எந்தவொரு அதிகாரியின் மீதும் அவர் அழுத்தத்தை பிரயோகிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஆகவே சட்டம் சுயாதீனமாக காணப்படுகின்றது எனக் குறிப்பிட முடியாது.

இன்று காணப்படும் நிலைமை அவ்வாறல்ல, ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தின் ஊடாக எமக்கு நியாயம் கிடைக்கும், உண்மை வெளிக்கொண்டுவரப்படும் என நாம் நம்பவில்லை. இந்த கடிதத்தை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024